மாவட்ட செய்திகள்

வெள்ளகோவிலில் நூற்பாலையில் தீ விபத்து எந்திரங்கள் எரிந்து நாசம் + "||" + The spinning fire in the spine Machines are destroyed

வெள்ளகோவிலில் நூற்பாலையில் தீ விபத்து எந்திரங்கள் எரிந்து நாசம்

வெள்ளகோவிலில் நூற்பாலையில் தீ விபத்து எந்திரங்கள் எரிந்து நாசம்
வெள்ளகோவிலில் உள்ள நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டு எந்திரங்கள் எரிந்து நாசமாகின.

வெள்ளகோவில்,

வெள்ளகோவில்– மூலனூர் ரோட்டில் வி.எஸ்.என். நூற்பாலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் கழிவு பஞ்சை அரைக்கும் எந்திரம் சூடானதால், அதில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த ஊழியர்கள் உடனே தீயை அணைக்க முயன்றதுடன், வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல்கொடுத்தனர். வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி தனசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. மேலும் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி சம்பவஇடத்தை நேரில் பார்வையிட்டார்.தொடர்புடைய செய்திகள்

1. வில்லியனூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
2. சாயல்குடி அருகே தாழ்வான மின்கம்பிகளால் விபத்து அபாயம்
சாயல்குடி அருகே தாழ்வான மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. கோத்தகிரி அருகே மின்கசிவால் வீடு மற்றும் கடையில் தீ விபத்து
கோத்தகிரி அருகே மின்கசிவால் வீடு மற்றும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
4. கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
கோவை அருகே சுண்ணாம்பு காளவாய் பகுதியில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த எந்திரங்கள், மொபட் எரிந்து நாசமானது.
5. 6 பேர் பலியான வழக்கில் விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு 6 ஆண்டு சிறை
உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் பலியான வழக்கில் விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.