மரத்தில் மினிவேன் மோதி கவிழ்ந்தது; பெண் உள்பட 3 பேர் படுகாயம் போலீசார் விசாரணை


மரத்தில் மினிவேன் மோதி கவிழ்ந்தது; பெண் உள்பட 3 பேர் படுகாயம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Jun 2018 4:00 AM IST (Updated: 10 Jun 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் இருந்து திருத் துறைப்பூண்டி நோக்கி நேற்று குடிநீர் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு மினிவேன் சென்று கொண்டிருந்தது.

கோட்டூர்,

தஞ்சையில் இருந்து திருத் துறைப்பூண்டி நோக்கி நேற்று குடிநீர் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு மினிவேன் சென்று கொண்டிருந்தது. வேனை தஞ்சையை சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார். இந்த மினிவேனில் தஞ்சையை சேர்ந்த கலாவதி (40), சந்தோஷ் (17) ஆகியோர் பயணம் செய்தனர். கோட்டூர் தோட்டம் என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சாலை யோரத்தில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுரை இடித்து விட்டு, மரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வெள்ளைச்சாமி, கலாவதி, சந்தோஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story