மாவட்ட செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + The teachers demanded to implement the old pension scheme

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தஞ்சையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் முருகன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் குழந்தைசாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மா வட்ட செயலாளர் கனகசபை வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு, அனைவருடைய கருத்துகளை கேட்பதுடன், 6-வது ஊதியக்குழுவில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளையும் ஆய்வு செய்து மத்தியஅரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளை மூடுவது அல்லது இணைப்பது என்ற திட்டத்தை உடனே கைவிட வேண்டும். ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும் வகையில் உள்ள திட்டத்தை தமிழகஅரசு கைவிட வேண்டும். கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் சங்கரன், ஆசைத்தம்பி, கணேசன், எழிலரசன், மாவட்ட நிர்வாகிகள் ராஜா, தெய்வபாலன், கருப்பையன், ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

முடிவில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.