இனிப்பான உலக சாதனை


இனிப்பான உலக சாதனை
x
தினத்தந்தி 10 Jun 2018 7:16 AM GMT (Updated: 10 Jun 2018 7:16 AM GMT)

அசாம் மாநில அரசின் கதர் மற்றும் கிராம தொழில்கள் நிறுவனம் பழங்குடியின மக்கள் மத்தியில் தேனீக்களை வளர்க்கும் ஆர்வத்தை பெருகுவதற்கான முயற்சியில் இறங்கி உலக சாதனை படைத்திருக்கிறது.

ஒரே நாளில் பழங்குடியின மக் களுக்கு, தேனீக்கள் வளர்க்கும் 1000 பெட்டிகளை வழங்கி இருக்கிறது. இதற்கு முன்பு இஸ்ரேலில் ஒரே நாளில் 841 தேனி வளர்ப்பு பெட்டிகள் வினியோகம் செய்யப்பட்டதே உலக சாதனையாக பதிவாகி உள்ளது.

மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 1 லட்சத்து 30 ஆயிரம் தேனீ வளர்ப்பு பெட்டிகளை வினியோகிக்க வேண்டும் என்பதே கதர் மற்றும் கிராம தொழில்கள் நிறு வனத்தின் குறிக்கோளாக இருக்கிறது. அந்த இலக்கை எட்டும் நோக்கில் இதுவரை 27 ஆயிரம் தேனீ பெட்டிகள் பொதுமக் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேனீக்கள் வளர்ப்பதற்கான உபகரணங்கள் வழங்குவதோடு தேனீக்களை பிடித்தெடுப்பது எப்படி? தேனீக்களின் எதிரிகள் யார்? அவைகளிடம் இருந்து எப்படி தேனீக்களை பாதுகாக்க வேண்டும்? தேன்கூடுகளில் இருந்து பிரித்தெடுத்த தேனை எப்படி சுத்திகரிக்க வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. தேனீக்கள் வளர்க்க வேண்டியதன் அவசியம் பற்றி அந்நிறுவனத்தின் தலைவர் வி.கே.சக்ஸேனா சொல்கிறார்:

‘‘மலை வாழ்விடங்களில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. அதனால் விலைமதிக்க முடியாத அரிய தாவர இனங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. தேனீக்கள் நடமாட்டம் இருந்தால்தான் மகரந்த சேர்க்கை நடைபெற்று தாவர இனங்கள் அதிகரிக்கும். மலைவாழ் மக் களுக்குதான் தேனீக்களுடன் நெருங்கிய பந்தம் இருக்கிறது. அது காலம் காலமாக தொடர வேண்டும். தற்போதைய தலைமுறையினருக்கும் தேனீக்கள் வளர்ப்பு ஆர்வம் பெருக வேண்டும். தேனீக்கள் வளர்ப்பு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய அங்கம். தற்போது வழங்கப்பட்டிருக்கும் தேனீ பெட்டிகள் மூலம் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கஜிரங்கா வனப்பகுதியில் ஆண்டுக்கு 30 ஆயிரம் கிலோ தேன் சேகரிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்கிறார். 

Next Story