மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் அருகே 7 வயது சிறுமி கொலை: கைதான அண்ணன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு + "||" + 7 year old girl killed Brother arrested, Addition to Child Reform School

சங்கரன்கோவில் அருகே 7 வயது சிறுமி கொலை: கைதான அண்ணன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு

சங்கரன்கோவில் அருகே 7 வயது சிறுமி கொலை: கைதான அண்ணன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு
சங்கரன்கோவில் அருகே 7 வயது சிறுமி கொலையில் கைதான அண்ணன் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டா

திருவேங்கடம், 

சங்கரன்கோவில் அருகே 7 வயது சிறுமி கொலையில் கைதான அண்ணன் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

சிறுமி கொலை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு 7 வயதில் ரக்‌ஷனா என்ற மகளும், 15 வயதில் ஒரு மகனும் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் 15 வயது சிறுவன், அங்கு தூங்கிக் கொண்டிருந்த தனது தங்கை ரக்‌ஷனாவை களைகொத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தான். தடுக்க முயன்ற பாட்டியும் காயம் அடைந்தார்.

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு

இந்த கொலை குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்கையை கொலை செய்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார் பாளையங்கோட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அவனுக்கு மனநல சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தனர்.

இதற்கிடையே, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 7 வயது சிறுமியை அவளது அண்ணனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.