மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை + "||" + Electrician worker suicide Cause workload? Police investigation

சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை

சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை
சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்வாரிய ஊழியர் தற்கொலை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயனேந்தல் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 46). இவர் தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைவேல் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

பணிச்சுமை காரணமா?

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் குழந்தைவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தைவேல் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. கோவில்பட்டி அருகே தந்தை இறந்த நாளில் வாலிபர் தற்கொலை கிணற்றில் குதித்து சோக முடிவு
கோவில்பட்டி அருகே தந்தை இறந்த நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர், தந்தை தற்கொலை செய்த கிணற்றிலேயே குதித்து உயிரை மாய்த்து கொண்டார்.
2. கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேர் பலியான விவகாரம்: விசாரணை அறிக்கையை உடனடியாக வழங்க போலீஸ் டி.ஜி.பி.க்கு குமாரசாமி உத்தரவு
கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேர் பலியான விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கையை உடனடியாக வழங்க போலீஸ் டி.ஜி.பி.க்கு, முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
3. வங்கி ஊழியர் சாவு குறித்து விசாரணை நடத்தக்கோரி மாவோயிஸ்டுகள் கண்டன ஊர்வலம் நடத்தியதால் பரபரப்பு
வங்கி ஊழியர் சாவு குறித்து விசாரணை நடத்தக்கோரி மாவோயிஸ்டுகள் கண்டன ஊர்வலம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
4. கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கொலை வழக்கில் ஜாமீனில் வெளி வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. டி.வி. பார்த்ததை தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
ஆறுமுகநேரியில் டி.வி. பார்த்ததை தாயார் கண்டித்ததால், கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.