திருவையாறு அருகே வீட்டின் மீது லாரி மோதி கவிழ்ந்தது போலீசார் விசாரணை


திருவையாறு அருகே வீட்டின் மீது லாரி மோதி கவிழ்ந்தது போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Jun 2018 4:15 AM IST (Updated: 11 Jun 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே வீட்டின் மீது லாரி மோதி கவிழ்ந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவையாறு,

டால்மியாவில் இருந்து நேற்று அதிகாலை திருவையாறு-தஞ்சை வழியாக ஒரத்தநாட்டிற்கு சிமெண்டு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை டிரைவர் கார்த்திகேயன் (35) என்பவர் ஓட்டிவந்தார். லாரி திருவையாறு அய்யனார் கோவில் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த கிணற்று கட்டையில் மோதி, அருகில் இருந்த வெங்கடேசன் என்பவரின் வீட்டின் மீது மோதி லாரி கவிழ்ந்தது.இதில் வீட்டின் சுவர் இடிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story