மாவட்ட செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகாவுக்கு சாதகமாக உள்ளது வைகோ பேட்டி + "||" + Cauvery management board is in favor of Karnataka Vaiko

காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகாவுக்கு சாதகமாக உள்ளது வைகோ பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகாவுக்கு சாதகமாக உள்ளது வைகோ பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகாவுக்கு சாதகமாக உள்ளது என மதுரை வந்த வைகோ பேட்டி அளித்தார்.

மதுரை,

மதுரைக்கு வந்த வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக காவிரி நீரை திறக்க மாட்டார்கள் என்று நான் ஏற்கனவே கூறினேன். அதன்படி திறக்க மாட்டோம் என்று அறிவித்து இருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்து உள்ளது. அணை பாதுகாப்பு, சி.ஆர்.பி.எப். வீரர்களை பாதுகாப்புக்காக நிறுத்துவது போன்ற எந்த அதிகாரமும் இல்லாமல் அதிகாரமற்ற அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் உள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அணை பாதுகாப்பாக உள்ளது என்று ஆய்வு செய்து கூறி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.