மு.க.ஸ்டாலினை தமிழக முதல்–அமைச்சர் ஆக்குவதே என் கடமை வைகோ பேச்சு


மு.க.ஸ்டாலினை தமிழக முதல்–அமைச்சர் ஆக்குவதே என் கடமை வைகோ பேச்சு
x
தினத்தந்தி 11 Jun 2018 4:15 AM IST (Updated: 11 Jun 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலினை தமிழக முதல்–அமைச்சராக்குவதே என் கடமை என திருமண விழாவில் கலந்துகொண்ட வைகோ பேசினார்.

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசியதாவது:–

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுகிறது. செப்டம்பர் 15–ந்தேதி நடைபெறும் மாநாட்டில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை முதல்–அமைச்சர் ஆக்குவதே என் கடமை. முதல்–அமைச்சராக ஸ்டாலினை ஆக்கியே தீருவோம். இதற்காக கடுமையாக பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story