மாவட்ட செய்திகள்

அன்னவாசல் அருகே கோவில் கலசத்தை திருட முயன்ற 5 பேர் கைது + "||" + Five arrested for attempting to steal a temple near Annavasal

அன்னவாசல் அருகே கோவில் கலசத்தை திருட முயன்ற 5 பேர் கைது

அன்னவாசல் அருகே கோவில் கலசத்தை திருட முயன்ற 5 பேர் கைது
அன்னவாசல் அருகே கோவில் கலசத்தை திருட முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அன்னவாசல்,

அன்னவாசல் அருகே உள்ள புல்வயலை அடுத்த நெரிகிப்பட்டியில் பழமை வாய்ந்த நெருகி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த மாடசாமி உள்பட 4 பேர் சேர்ந்து கோவிலில் சாமி கும்பிட வந்துள்ளனர். அவர்களுக்கு கோவில் பூசாரி சின்னத்தம்பி விபூதி வழங்கியுள்ளார். பின்னர் அவர்களிடம் யார் என விசாரித்த போது அவர்கள் விறகு வாங்க வந்ததாக கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் உள்ளூரை சேர்ந்த அழகேந்திரன் (வயது29) மற்றும் சரவணன் ஆகியோரின் உதவியுடன் கோவில் கலசத்தை திருட கோவிலை சுற்றி வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது.


இதனையடுத்து மதுரையை சேர்ந்த மாடசாமி மற்றும் புல்வயலை சேர்ந்த அழகேந்திரன் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோவில் கலசத்தை திருட வந்தது தெரியவந்தது. இந்த விஷயம் மற்ற நான்கு பேருக்கும் தெரிந்து அங்கிருந்து தப்பித்து அலங்காநல்லூர் சென்று விட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மற்ற 4 பேரும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருப்பதை உறுதி செய்தனர்.

பின்னர் அங்கு சென்ற போலீசார் கோவில்பட்டியை கருப்பையா (42) வெள்ளியகுன்றம் சக்திவேல் (57) இடையப்பட்டி செல்வம் (46) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதில் புல்வயலை சேர்ந்த சரவணன் மட்டும் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து கோவில் பூசாரி சின்னத்தம்பி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. நங்கநல்லூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; என்ஜினீயர் கைது
நங்கநல்லூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கடன் தொல்லையால் கொள்ளையடிக்க முயன்றதாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
2. ஓட்டேரியில் மளிகை கடைக்காரரிடம் வழிப்பறி; 3 பேர் கைது
ஓட்டேரியில் மளிகை கடைக்காரரிடம் செல்போனை பறித்துச்சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. இருவேறு இடங்களில் ரூ.12 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் : 2 பேர் கைது
மும்பை காட்கோபர்- மான்கூர்டு லிங் சாலையில் ஒருவர் போதைப்பொருளுடன் வருவதாக காட்கோபர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
4. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
5. உரக்குடோன் ஊழியரை கொல்ல முயற்சி சுமைப்பணியாளர்கள் 4 பேர் கைது
திருச்சியில் உரக்குடோன் ஊழியரை கொல்ல முயன்ற வழக்கில் சுமைப்பணியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.