மாவட்ட செய்திகள்

கோவில் வருவாய் மூலம் இந்து குழந்தைகளுக்கு இலவச கல்வி, மருத்துவம் வழங்க வேண்டும் எச்.ராஜா பேச்சு + "||" + Free education for Hindu children through temple revenue, medical must provide H.Raja speech

கோவில் வருவாய் மூலம் இந்து குழந்தைகளுக்கு இலவச கல்வி, மருத்துவம் வழங்க வேண்டும் எச்.ராஜா பேச்சு

கோவில் வருவாய் மூலம் இந்து குழந்தைகளுக்கு இலவச கல்வி, மருத்துவம் வழங்க வேண்டும் எச்.ராஜா பேச்சு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் நிர்வாக சீர்கேட்டையும், ஆகம விதி மீறல்களையும் கண்டித்து ஸ்ரீரங்கம் மீட்புகுழு சார்பில் ஸ்ரீரங்கம் காப்போம், புனிதம் மீட்போம் என்ற பெயரில், மின்வாரிய அலுவலகம் அருகே நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் நிர்வாக சீர்கேட்டையும், ஆகம விதி மீறல்களையும் கண்டித்து ஸ்ரீரங்கம் மீட்புகுழு சார்பில் ஸ்ரீரங்கம் காப்போம், புனிதம் மீட்போம் என்ற பெயரில், மின்வாரிய அலுவலகம் அருகே நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் தலைமை தாங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசுகையில், அறநிலையத்துறையும், அரசும் கோவில்களை விட்டு வெளியேற வேண்டும். கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதி போன்றவை எப்படி அந்தந்த மதத் தலைவர்களிடம் உள்ளதோ அதேபோல இந்து கோவில்களையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் உடையுடன் எப்படி வந்தனர். பெருமாள் மீது பையை வீசியவனை பைத்தியம் என்கின்றனர். கோவில் சொத்துகளை மீட்டு அதனை இன்றைய சந்தை விலைக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு இந்து குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் 10 பேர் கொண்ட வழிபடுவோர் கமிட்டி அமைக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக், சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில அமைப்பாளர் இளங்குமார் சம்பத், விசுவ இந்து பரிசத் மாநில பொருளாளர் பாண்டியன், இந்து முன்னணி கோட்டத் தலைவர் சிவக்குமார், வீரமுத்தரையர் சங்க நிறுவனத்தலைவர் செல்வக்குமார், தேவர் பேரவை காசிமாயத்தேவர், ஸ்ரீரங்கம் கோவில் பராசர பத்ரிநாராயணபட்டர் ஆகியோரும் பேசினர். முடிவில் விசுவ இந்து பரிசத் மாவட்ட தலைவர் பத்மநாபன் நன்றி கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க.வை யாரும் கபளகரம் செய்ய முடியாது துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு
அ.தி.மு.க.வை யாரும் கபளகரம் செய்ய முடியாது என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
2. ‘சாரண இயக்கத்தில் மாணவர்கள் சேர்ந்து விருதுகள் பெற வேண்டும்’ அமைச்சர் தங்கமணி பேச்சு
சாரண இயக்கத்தில் மாணவ, மாணவிகள் சேர்ந்து பணியாற்றி பல்வேறு விருதுகளை பெறவேண்டும், என அமைச்சர் தங்கமணி பேசினார்.
3. இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரஸ் குற்றவாளி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரஸ் தான் குற்றவாளி என மயிலாடுதுறையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
4. தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் ராசிபுரத்தில் கமல்ஹாசன் பேச்சு
தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று ராசிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
5. படித்தவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க கூடாது கமல்ஹாசன் பேச்சு
படித்தவர்கள் அரசியல் எதற்கு? என ஒதுங்கி விடக்கூடாது என்று நாமக்கல்லில் கமல்ஹாசன் கூறினார்.