மாவட்ட செய்திகள்

பெரும்பள்ளம் அணை பகுதியில் கடத்துவதற்காக வைக்கப்பட்ட 150 மணல் மூட்டைகள் பறிமுதல் + "||" + Most of sands seals were seized in the dam area

பெரும்பள்ளம் அணை பகுதியில் கடத்துவதற்காக வைக்கப்பட்ட 150 மணல் மூட்டைகள் பறிமுதல்

பெரும்பள்ளம் அணை பகுதியில் கடத்துவதற்காக வைக்கப்பட்ட 150 மணல் மூட்டைகள் பறிமுதல்
பெரும்பள்ளம் அணை பகுதியில் கடத்துவதற்காக வைக்கப்பட்ட 150 மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில் பெரும்பள்ளம் அணை உள்ளது. இந்த அணைக்கு கடம்பூர் மலைப்பகுதி மற்றும் மல்லியம்மன் துர்கம் மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீர் காட்டாறு வழியாக வந்து சேருகிறது. அணை நிரம்பியதும் அதன் உபரிநீர் மதகு வழியாக வெளியேறி கெம்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பள்ளத்தின் மூலமாக பவானி ஆற்றை சென்றடைகிறது.

மழைநீரில் அடித்துவரப்படும் மணல் இந்த பள்ளத்தில் அதிக அளவு படிந்துள்ளது. இந்த மணலை அந்த பகுதியில் உள்ள மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பகல் நேரத்தில் அள்ளி விற்பனை செய்கிறார்கள் என்று பொதுமக்கள் சத்தியமங்கலம் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தார்கள்.

அதைத்தொடர்ந்து தாசில்தார் கிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் குத்தியாலத்தூர் நில வருவாய் ஆய்வாளர் பொன்னுசாமி, கெம்பநாயக்கன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி ஆகியோர் பெரும்பள்ளம் அணை பகுதிக்கு சென்று பார்த்தார்கள். அப்போது நரசாபுரம், தண்ணீர்பந்தல், கொருமடுவு ஆகிய இடங்களில் 150 சிமெண்ட் சாக்கு பைகள் வைக்கப்பட்டிருந்து.

அவற்றை பிரித்து பார்த்தபோது மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ மர்மநபர்கள் கடத்துவதற்காக அணை பகுதியில் உள்ள பள்ளங்களில் மணலை அள்ளி அவற்றை மூட்டைகளில் நிரப்பி வைத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘இதுபோல் மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் மாநகரில் 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்பூர் மாநகரில் தடைவிதிக்கப்பட்ட 2½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. திருமங்கலம் அருகே டாஸ்மாக் குடோனில் கணக்கில் வராத ரூ.53 ஆயிரம் பறிமுதல்; மேலாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
திருமங்கலம் அருகே கப்பலூர் டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதன் மேலாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
3. மானாமதுரை, காரைக்குடி, சிங்கம்புணரியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு அங்கிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ கஞ்சா பறிமுதல் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5. சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1¼ லட்சம் பறிமுதல்; 7 பேர் மீது வழக்கு
லால்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.