மாவட்ட செய்திகள்

பசுமை சாலை திட்டம்: விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் - கம்யூனிஸ்டு கட்சியினர் மனு + "||" + Green road project: withdrawal case against farmers - Communist Party petition

பசுமை சாலை திட்டம்: விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் - கம்யூனிஸ்டு கட்சியினர் மனு

பசுமை சாலை திட்டம்: விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் - கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு அளித்தனர்.
சேலம்,

பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் சிலர் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.


அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் யாருடைய நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க வருகிற 14-ந் தேதி கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்துக்கு முன்பாக கடந்த 6-ந் தேதி ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்தில் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளக்க வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் சிலரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். இதில் முத்துகுமார், மாரிமுத்து ஆகிய விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

இந்த செயல் மாவட்ட கலெக்டர் கூட்டிய கூட்டத்திற்கு கலந்து கொள்ள விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாகவே கருதுகிறோம். சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும். விசாரணை என்ற பெயரில் போலீசார் விவசாயிகள் வீட்டுக்குள் சென்று அவர்களை அச்சுறுத்துவதை தடுத்திட வேண்டும். கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்ப பெற வேண்டும். மேலும் விவசாயிகள் முத்துகுமார், மாரிமுத்து ஆகியோர் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சேலம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் அனுசரிப்பு
சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
3. கஜா புயலால் பாதிப்பு: “தென்னம்பிள்ளைகளை எரிக்க மனமில்லாமல் புதைக்கிறோம்” - விவசாயிகள் வேதனை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பிள்ளையாக வளர்த்த “தென்னம்பிள்ளைகளை எரிக்க மனமில்லாமல் புதைக்கிறோம்” என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
4. வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5. புயலால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை மனு
திருவாரூர் மாவட்டத்தில், கஜா புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.