மாவட்ட செய்திகள்

பாம்பன் ரெயில் பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கியது + "||" + On the Pamban Railway The process of transforming the iron curtains began

பாம்பன் ரெயில் பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கியது

பாம்பன் ரெயில் பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கியது
ரூ.8 கோடி நிதியில் பாம்பன் ரெயில் பாலத்தில் புதிதாக இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கியது. இதன்காரணமாக திருச்சி பாசஞ்சர் ரெயில் 30–ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. கடலுக்குள் 146 தூண்கள் கட்டி, அதன் மீது 145 கர்டர்கள் அமைத்து தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன்மீது ரெயில்கள் சென்று வருகின்றன. கடலுக்குள் அமைந்துள்ளதோடு, 105 ஆண்டுகளை கடந்துள்ள பாலத்தில் பாதுகாப்பு கருதி அனைத்து ரெயில்களும் 20 கி.மீ. வேகத்தில் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பாம்பன் ரெயில் பாலத்தில் 27 கர்டர்கள் புதிதாக அமைக்க ரெயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே தொழிற்சாலையில் தயார் செய்யப்பட்ட இரும்பு கர்டர்கள் லாரி மூலம் பாம்பன் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, கிரேன் மூலம் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று புதிதாக இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் பாலத்தில் தூண்களின் மீது இருந்த பழைய இரும்பு கர்டர்கள் கிரேன் மூலம் முதலாவதாக அகற்றப்பட்டது. அதன் பின்பு பாம்பன் ரெயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக புதிய கர்டரானது பாலத்திற்கு தொழிலாளர்களால் இழுத்த கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு கிரேன் மூலமாக புதிய கர்டரானது பாலத்தில் பொருத்தப்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாம்பன் ரெயில் பாலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பாலத்தில் 44 கர்டர்கள் புதிதாக மாற்றப்பட்டன. தற்போது மேலும் 27 கர்டர்கள் புதிதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 10 கர்டர்கள் மட்டுமே தான் புதிதாக அமைக்கப்படவுள்ளன. நேற்று தொடங்கிய இப்பணி வருகிற 30–ந்தேதி வரை நடைபெற உள்ளது. புதிய கர்டர் சீரமைப்பு பணிகளையொட்டி வருகிற 30–ந்தேதி வரை திருச்சி–ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்பட்டு, பரமக்குடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயிலை தவிர மற்ற அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் ராமேசுவரம் வரை வந்து செல்லும் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் முதல் முறையாக கோவை ரெயில்நிலையம் முன் 100 அடி உயரத்தில் தேசியக்கொடி கம்பம்
தமிழகத்தில் முதல் முறையாக கோவை ரெயில்நிலையம் முன் 100 அடி உயரத்தில் தேசியக்கொடி கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
2. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் 100 பேர் கைது
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொரடாச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. அம்ரிதா எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயிலுக்கு பதிலாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத புதிய ரெயில், கேரளாவுக்காக இயக்கப்படுகிறது
கேரள பயணிகளின் வசதிக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்படாமல் தென்னக ரெயில்வேயில் அம்ரிதா எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயிலுக்கு பதிலாக புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.
4. பாம்பனில் புதிய ரெயில் பாலம் அமைக்க மண் ஆய்வு தொடங்கியது
புதிய ரெயில் பாலம் அமைக்க பாம்பனில் மண் ஆய்வு பணி தொடங்கியது.
5. ராமநாதபுரம் வரை இயக்கப்படுகிறது: ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
ராமேசுவரம் ரெயில் பாதையில் உள்ள பாம்பன் ரெயில்பாலம் பழுதடைந்ததை தொடர்ந்து அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் ராமநாதபுரம் வரை இயக்கப்படுகிறது.