செக் மோசடி வழக்கு: தலைமை ஆசிரியருக்கு 6 மாதம் ஜெயில்


செக் மோசடி வழக்கு: தலைமை ஆசிரியருக்கு 6 மாதம் ஜெயில்
x
தினத்தந்தி 13 Jun 2018 3:30 AM IST (Updated: 13 Jun 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

செக் மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு குற்றவியல் நடுவர் 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

சாத்தூர்,

சிவகங்கை மாவட்டம் மாங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ராஜா(வயது50). இவர்2007–ம் ஆண்டு சாத்தூரில் ஆசிரியராக இருந்துள்ளார். அப்போது சாத்தூர் புதுப்பாளையத்தை சேர்ந்த பால்வியாபாரியான உதயசூரியன் என்பவருக்கு நிலம் வாங்கித்தருவதாக கூறி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பெற்றுள்ளார். நிலம் கொடுக்காததால் வாங்கிய தொகைக்கு காசோலை கொடுத்துள்ளார். ஆனால் வங்கியில் பணம் இல்லை. இதனால் தம்மை மோசடி செய்து விட்டதாக உதயசூரியன் சாத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை குற்றவியல் நடுவர் கீதா விசாரித்து ராஜாவுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story