நாராயணசாமியுடன் மீனவர்கள் சந்திப்பு: நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை


நாராயணசாமியுடன் மீனவர்கள் சந்திப்பு: நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2018 4:45 AM IST (Updated: 13 Jun 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மீனவர் பேரவையின் முன்னாள் தலைவர் மற்றும் மீனவர் பஞ்சாயத்து நிர்வாகிகள் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி,

தேசிய மீனவர் பேரவையின் முன்னாள் தலைவர் இளங்கோ மற்றும் மீனவர் பஞ்சாயத்து நிர்வாகிகள் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது மீனவர்களுக்கான திட்டங்களில் நிதி உதவி வழங்கப்படாமல் உள்ள திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினார்கள்.

புதுவை மாநிலத்தின் பட்ஜெட்டில் மீனவர்கள் நலத்திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார்.


Next Story