மாவட்ட செய்திகள்

குறுவைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கல்லணையில் நெல் விதைகளை தூவி விவசாயிகள் போராட்டம் + "||" + Farmers struggle to distribute paddy seeds in the stone to emphasize water for the radius

குறுவைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கல்லணையில் நெல் விதைகளை தூவி விவசாயிகள் போராட்டம்

குறுவைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கல்லணையில் நெல் விதைகளை தூவி விவசாயிகள் போராட்டம்
குறுவைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கல்லணையில் நெல் விதைகளை தூவி போராட்டம் நடத்திய விவசாயிகள் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி,

குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

தமிழக விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லணையில் நெல் விதைகளை தூவி போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கம் அறிவித்தது. அதன்படி நேற்று கல்லணையில் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தலைமை தாங்கினார்.


இதில் காவிரி தமிழ் தேசிய விவசாயிகள் சங்க தலைவர் சுப்பிரமணியன், தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் லெட்சுமணன், பொன்ரவிச்சந்திரன், சரபோஸ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கல்லணையில் மண்வெட்டியால் கொத்தி நெல் விதைகளை தூவி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 26 பேரையும் கைது செய்தனர். விவசாயிகள் கல்லணையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். ஆனால் விவசாயிகள் மாற்று பாதையில் வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம் பெண்கள் உள்பட 65 பேர் கைது
திருவாரூரில் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ரேஷன் கடை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 14 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. புள்ளம்பாடியில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் விவசாயிகள் மறியல்
புள்ளம்பாடியில் முள்ளால் சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டதால் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
3. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பா.ஜனதா அலுவலகம் மீது கேரட்டை வீசியதால் பரபரப்பு உண்டானது.
4. புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம்
புதுக்கடை அருகே முன்சிறை சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.
5. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை 80 பேர் கைது
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதில் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.