மாவட்ட செய்திகள்

சொத்துப்பிரச்சினையில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் போலீசார் விசாரணை + "||" + An elder brother is investigating the murder of a brother in the property issue

சொத்துப்பிரச்சினையில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் போலீசார் விசாரணை

சொத்துப்பிரச்சினையில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் போலீசார் விசாரணை
அண்ணன், தம்பிக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலப் பிரச்சினையால் தகராறு ஏற்பட்டது. இதில் 2 பேரும் மோதிக் கொண்டதில், முத்துக்குமாரின் கை முறிந்தது.
கீரனூர்,

அண்டக்குளம் அருகே உள்ள புதுக்குடியன் பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 43). தனியார் பஸ் கண்டக்டர். இவரது தம்பி வையாபுரி (35). இவர் அரசு பஸ் கண்டக்டர். இந்தநிலையில் அண்ணன், தம்பிக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலப் பிரச்சினையால் தகராறு ஏற்பட்டது. இதில் 2 பேரும் மோதிக் கொண்டதில், முத்துக் குமாரின் கை முறிந்தது. இதுதொடர்பாக போலீசார் இருவரையும் சமரசம் செய்து வைத்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கீரனூரில் உள் ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணன், தம்பியும் கலந்து கொண்டனர். பின்னர் எதிரே எதிரே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில் முத்துக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வையாபுரியின் வயிற்றில் குத்தினார். இதனால் அவர் படுகாயமடைந்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் முத்துக்குமாரை தாக்கினர். இதனால் அவரும் காயமடைந்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் காயமடைந்த முத்துமாரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கும், கத்தி குத்து விழுந்த வையாபுரியை திருச்சி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...