மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம் + "||" + The Zakoro-Geo organization demonstrated on the 3rd day to emphasize various demands

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பெரம்பலூரில் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 11-ந்தேதி மாலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து 2-வது நாளாக நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று 3-வது நாளாக பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அருள்ஜோதி, ராமர், கலியமூர்த்தி, தயாளன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அரசு வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில நிர்வாகிகளை போலீசார் கைது செய்ததற்கு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.