மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் பாதிப்பு: கூடலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் விரிசல் + "||" + Damage caused by rains: Cholapuram-Sultanpatheri road crack

தொடர் மழையால் பாதிப்பு: கூடலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் விரிசல்

தொடர் மழையால் பாதிப்பு: கூடலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் விரிசல்
தொடர் மழையால் கூடலூர்- சுல்தான்பத்தேரி சாலையில் விரிசல் ஏற்பட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கூடலூர்,

கூடலூரில் இருந்து வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரிக்கு நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் மைசூரு, கூடலூர், கேரளாவை இணைக்கும் சாலையாக விளங்குகிறது. இதனால் தினமும் ஏராளமான சரக்கு லாரிகள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர கூடலூர், தேவர்சோலை, நெலாக்கோட்டை, பிதிர்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சேவை பெற சுல்தான்பத்தேரிக்கு சென்று வருகின்றனர்.


இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த சிலதினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலையில் புஷ்பகிரி என்ற பகுதி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் அந்த வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் மழை தீவிரமாக பெய்து வருவதால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நாளுக்குநாள் சேதம் அதிகமாகி வருவதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது சாலையின் பாதி அளவு உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க சாலையோரம் நெடுஞ்சாலைத்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். மேலும் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தடுப்பு கம்பிகளை நட்டு வைத்துள்ளனர். இதனால் சாலையில் முழுமையாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருமுனையில் வாகனங்கள் வந்து சென்ற பின்னரே எதிர்முனையில் உள்ள வாகனங்கள் செல்ல முடிகிறது. தொடர்ந்து கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சாலை சீரமைப்பு பணியும் நடைபெற வில்லை. இதனால் இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் விபத்துக்கு ஆளாகும் நிலை காணப்படு கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தால் தபால், வங்கி சேவைகள் பாதிப்பு
தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தால் தபால், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. பஸ், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு எதிரொலி: ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை
ஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாக, ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. கீழ்வேளூர் அருகே நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
கீழ்வேளூர் அருகே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பம் மீது வேன் மோதியது போக்குவரத்து பாதிப்பு
கும்பகோணத்தில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பம் மீது வேன் மோதியது. இதனால் இரும்பு கம்பம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. முழு அடைப்பு: கூடலூர்– கேரளா இடையே வாகன போக்குவரத்து நிறுத்தம்
முழு அடைப்பு போராட்டம் காரணமாக கூடலூர்– கேரளா இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.