விழுப்புரத்தில் இறைச்சி கடைக்காரருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
விழுப்புரத்தில் இறைச்சி கடைக்காரரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஹயாத்கான் (வயது 52). இவர் விழுப்புரம் வடக்கு தெருவில் ஆட்டு இறைச்சி கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது முன்விரோதம் காரணமாக சிலர், ஹயாத்கானிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோத தகராறு காரணமாக அதே பகுதியை சேர்ந்த சவுக்கத்அலி (24), உமர் (26), ஜின்னா (30) ஆகியோர் ஒன்று சேர்ந்து, ஹயாத்கானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து உமர் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story