‘கள்ளகாதலை கைவிட மறுத்ததால் நண்பனை தீர்த்து கட்டினேன்’ கைதான ஜவுளிக்கடை உரிமையாளர் போலீசில் வாக்குமூலம்


‘கள்ளகாதலை கைவிட மறுத்ததால் நண்பனை தீர்த்து கட்டினேன்’ கைதான ஜவுளிக்கடை உரிமையாளர் போலீசில் வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 Jun 2018 5:00 AM IST (Updated: 17 Jun 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

கள்ளகாதலை கைவிட மறுத்ததால் நண்பனை தீர்த்து கட்டினேன் என்று கைதான ஜவுளிக்கடை உரிமையாளர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராஜசூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் கோசிமின்(வயது 33). இவருடைய மனைவி தெய்வலட்சுமி(28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சோசிமின், காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் ஜவுளி கடை வைத்துள்ளார். இவரது நண்பர் சிதம்பரம் எம்.கே.தோட்டத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன்(38). கோசிமினின் மனைவியுடன் சுந்தரப £ண்டியனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தனது நண்பன் தன்னுடைய நட்புக்கு இழைத்த துரோகத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த கோசிமின் நேற்று முன்தினம் இரவு சுந்தரபாண்டியனின் தலையை துண்டித்து படுகொலை செய்தார். தொடர்ந்து கோசிமின் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக கோசிமின் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

நான் சொந்தமாக கார் வைத்துள்ளேன். இதில் பகுதிநேர டிரைவராக சுந்தரபாண்டியன் கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்தார். மேலும் எனது ஜவுளிகடைக்கு தேவையான பொருட்களையும் அவ்வப்போது வாங்கி வந்து தருவார். இதன் மூலம் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழக தொடங்கினோம். மேலும் எனது வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்து செல்வார்.

இந்த நிலையில் எனது மனைவி தற்போது கரூரில் உள்ள அவருடைய தாய் வீட்டுக்கு காரில் சென்றார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்த போது, அவர் யாருடனோ போனில் பேசி வந்தார். இதை பார்த்த எனது உறவினர்கள் எனக்கு இதுகுறித்து தெரியப்படுத்தினர்.

பின்னர் இதுபற்றி விசாரித்த போது சுந்தரபாண்டியன் தான் போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து தான் அவர்களுக்கிடையே கள்ளதொடர்பு இருந்தது எனக்கு தெரியவந்தது. மேலும் இவர்களுக்கிடையே நீண்ட நாட்களாக இந்த தொடர்பு இருந்து வந்துள்ளது. நல்ல நண்பனாக பழகியவன் எனக்கு துரோகம் செய்துவிட்டதே எண்ணி வேதனையடைந்தேன்.

தொடர்ந்து சுந்தரபாண்டியனை நான் கண்டித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து பேசி வந்தார். இதையடுத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, திட்டம் தீட்டி கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story