ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் - தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் - தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 17 Jun 2018 5:00 AM IST (Updated: 17 Jun 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.

வேதாரண்யம்,

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 7 பேர் வேலூர் ஜெயிலில் கடந்த 27 ஆண்டுகளாக தண்டனை கைதிகளாக உள்ளனர்.

இந்த கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க ஜனாதிபதி நிராகரித்து விட்டார். இதனை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறேன். மனிதநேயத்தின் அடிப்படையில் இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story