தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் வரத்து அதிகரிப்பு; விலையும் உயர்வு
தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதுடன் விலையும் உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை பூக்காரதெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு 60 கடைகள் உள்ளன. பூச்சந்தைக்கு திருச்சி, ஸ்ரீரங்கம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர், மணப்பாறை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகளில் தண்ணீர் இல்லை. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு பூக்கள் சாகுபடி செய்யப்படவில்லை. ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டும் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது.
இதனால் பூக்கள் விளைச்சல் அதிகமாக இருக்கிறது. இதன்காரணமாக பூச்சந்தைக்கு வரக்கூடிய பூக்களின் அளவு அதிகமாகவே இருக்கிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டியும் பூக்களின் விலை நேற்று அதிகமாக இருந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று விலை உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.60-க்கு விற்ற அரளி பூ ரூ.150-க்கும், ரூ.300-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.500-க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூ ரூ.300-க்கும், ரூ.200-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.400-க்கும் விற்பனையானது.
இதேபோல ரோஸ் பூ, சாதி அரும்பு, மருக்கொழுந்து போன்ற பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது. விலை உயர்ந்திருந்தாலும் பூக்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது.
இது குறித்து பூ வியாபாரி சந்திரசேகரன் கூறும்போது, இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் நெல் சாகுபடி மட்டுமின்றி பூக்கள் சாகுபடியும் குறைந்துவிட்டது. அதுவும் ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டுமே சாகுபடி பணி நடைபெற்றுள்ளது. கடந்த வாரம் பெய்த பரவலான மழையின் காரணமாக தற்போது பூக்களின் வரத்து அதிகமாக இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூக்களின் விலை குறைவாக தான் இருந்தது.
ஆனி மாதம் பிறந்துவிட்டதால் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் மக்கள் அதிகஅளவில் வாங்கி செல்கின்றனர். பன்னீர் ரோஸ் மருத்துவ குணம் கொண்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகஅளவில் இந்த பூவை வாங்கி செல்கின்றனர். மேலும் வயிற்றுவலியையும் குணப்படுத்தும். இந்த மாதம் முழுவதும் பூக்களின் விலை அதிகமாக தான் இருக்கும் என்றார்.

Related Tags :
Next Story