உரிய அனுமதியின்றி செயற்கை மணல் கொண்டு சென்ற 2 டிப்பர் லாரிகள், டிராக்டர் பறிமுதல்
போடி அருகே பாலார்பட்டி பகுதியில் உரிய அனுமதியின்றி செயற்கை மணல் கொண்டு சென்ற 2 டிப்பர் லாரிகள், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.
போடி,
போடி அருகே பாலார்பட்டி பகுதியில் சிலர் வாகனங்களில் அனுமதியின்றி செயற்கை மணல் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலையடுத்து போடி தாசில்தார் கே.ஆர்த்தி, ராசிங்கபுரம் வருவாய் ஆய்வாளர் சுந்தரராஜ், கூழையனூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் ஆகியோர் அங்கு கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த 2 டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த வாகனங்களில் உரிய அனுமதியின்றி எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணல் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து 2 டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story