வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
தொடர் திருட்டு சம்பவங்களால் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த விளார், மாதாக்கோட்டை மற்றும் தஞ்சை விரிவாக்க பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து மர்மநபர்கள் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது வாடிக்கையாகிவிட்டது. மேலும் தனியாக நடந்து செல்லும் பெண்களை தாக்கி நகை பறிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. விளார் ஊராட்சி காயிதேமில்லத்நகர், பாப்பாநகர் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை திருடிச் செல்கின்றனர். கடந்த 7 நாட்களில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 46 பவுன் சங்கிலியும், 4½ லட்சம் ரொக்கத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை திருடர்கள் பிடிபடவில்லை. தொடர் திருட்டால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
விரிவாக்க பகுதியில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கும்படி போலீசார் அறிவுரை வழங்கினர். அதன்படி காயிதேமில்லத்நகர், பாப்பாநகர் நலச்சங்கம் சார்பில் ஆட்டோ மூலம் தெரு, தெருவாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டது. அப்போது பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது அவசியம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகப்படும்படி யார் வந்தாலும் அவர்களிடம் வீட்டில் உள்ளவர்கள் பேச வேண்டாம். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். வீடுகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது.
பாப்பாநகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பல்வேறு இடங்களில் இருந்து மது குடிப்பதற்காக வந்து செல்கின்றனர். அவர்களில் சிலர் இதுபோன்ற திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே போலீசார் தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story