கச்சநத்தம் படுகொலை: தந்தை–மகன்கள் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கச்சநத்தம் படுகொலை: தந்தை–மகன்கள் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 18 Jun 2018 3:45 AM IST (Updated: 18 Jun 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

கச்சநத்தம் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய தந்தை, மகன்கள் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ளது கச்சநத்தம். இந்த கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த கிராமத்தில் புகுந்த ஒரு கும்பல் வீடு, வீடாய் சென்று அங்கிருந்த நபர்களை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் காயமடைந்த 6 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான சந்திரகுமார் மகன்கள் சுமன்(வயது 23), அருண் என்ற அருண்குமார் உள்பட 6 பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர். போலீசாரால் தேடப்பட்ட மாரநாடு கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் கருப்பையா(29) என்பவர் நேற்று மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் சரணடைந்த சகோதரர்களின் தந்தை சந்திரகுமார் உள்பட 12 பேரை போலீசார் கைதுசெய்தனர். கச்சநத்தத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கச்சநத்தம் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய அக்னிராஜா(22), சந்திரகுமார், இவரது மகன்கள் சுமன், அருண் என்ற அருண்குமார் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கலெக்டர் லதாவிற்கு பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து அக்னிராஜா உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் 4 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.


Next Story