முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுமா? ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுமா? ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 17 Jun 2018 11:00 PM GMT (Updated: 17 Jun 2018 6:45 PM GMT)

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்ட பின்னர் தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கூடலூர்,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும் என மொத்தம் 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள் குறுகிய கால நெற்பயிர்களை சாகுபடி செய்து பயன்பெற வேண்டும். இதற்கான நெல் விதைகள் வேளாண்துறை மூலம் பெற்று கொள்ளலாம். அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுமா? என கேட்டனர். அதற்கு அவர், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story