கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 18 Jun 2018 3:52 AM IST (Updated: 18 Jun 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரெயில் மூலமாக கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த தகவல் வருமாறு:-

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்போவதாக நாகர்கோவில் உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அவர்கள் மதுரை-புனலூர் பயணிகள் ரெயிலில் சோதனை நடத்தியபோது, முன்பதிவில்லாத பெட்டிகளில் இருக்கைகளுக்கு அடியிலும், கழிவறைகளிலும் சிறு, சிறு மூடைகளாக 1½ டன் ரேஷன் அரிசி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், ரேஷன் அரிசி மூடைகளை ரெயிலில் மறைத்து வைத்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்து, அவற்றை உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரெயில் மூலமாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story