கோட்டை மதில் சுவரிலிருந்து அகழியில் விழுந்த இளம்பெண்
வேலூர் கோட்டை மதில் சுவரிலிருந்து பெண் ஒருவர் அகழியில் விழுந்தார். அவரை போலீசார் மீட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் மாநகரின் மையப்பகுதியில் அழகிய அகழியுடன் பிரமாண்டமான கோட்டை அமைந்துள்ளது. தற்போது வேலூர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் கோட்டை அகழியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையில் மத்திய, மாநில அரசுகளின் அருங்காட்சியங்கள், ஜலகண்டேஸ்வரர் கோவில், மசூதி, காவலர் பயிற்சி பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து கோட்டையின் அழகை பிரமிப்புடன் ரசித்து புகைப்படம் எடுத்து செல்வார்கள்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் பலர் குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர். கோட்டை மதில்சுவர் நடைபாதையில் பலர் சென்று தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் எதிரே கோட்டை மதில் சுவரில் இருந்து ஒரு பெண் அகழியில் விழுந்தார். இதைப்பார்த்த சுற்றுலா பயணிகள் கூச்சல் போட்டனர். சிலர் பூங்கா வழியாக வந்து அகழியில் குதித்த அப்பெண்ணை காப்பாற்ற முயன்றனர்.
விரைந்து வந்த வடக்கு போலீசாரும், பெண் போலீசாரும் அகழியில் இறங்கி பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் தத்தளித்த அப்பெண்ணை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அப்பெண்ணிற்கு முதலுதவி அளித்தனர்.
பின்னர் போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில் அப்பெண் வேலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் என்பது தெரியவந்தது. பின்னர் அப்பெண்ணின் குடும்பத்தினரை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “அந்த பெண் அகழியில் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

Related Tags :
Next Story