வெம்பாக்கம் ஒன்றியத்தில் 22 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்


வெம்பாக்கம் ஒன்றியத்தில் 22 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 18 Jun 2018 10:25 PM GMT (Updated: 18 Jun 2018 10:25 PM GMT)

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் 22 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவு ஆணையை வழங்கினார்.

செய்யாறு, 

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 22 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன் தலைமை தாங்கினார். வெம்பாக்கம் தாசில்தார் சுபாஷ்சந்தர் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் கலந்துகொண்டு, 22 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவு ஆணையை வழங்கினார்.

இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் டி.பி.துரை, எம்.மகேந்திரன், எஸ்.திருமூலன், என்.ரகு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். 

Next Story