பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பின்னிபேட்டை வார்டு இடைத்தேர்தல்: மந்தமான வாக்குப்பதிவு
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பின்னிபேட்டை வார்டுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மந்தமாக வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை(புதன்கிழமை) எண்ணப்படுகின்றன.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பின்னிபேட்டை வார்டில் 34 ஆயிரத்து 572 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 17 ஆயிரத்து 746 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவார்கள். 16 ஆயிரத்து 826 பேர் பெண் வாக்காளர்கள் ஆவார்கள். இந்த வார்டு கவுன்சிலராக மகாதேவம்மா இருந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் மகாதேவம்மா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதனால், காலியாக உள்ள அந்த வார்டுக்கு ஜூன் மாதம் 18-ந் தேதி(அதாவது நேற்று)இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் ஸ்ரீவித்யா சசிகுமார், ஜனதாதளம்(எஸ்) சார்பில் ஐஸ்வர்யா, பா.ஜனதா சார்பில் சாமுண்டேஸ்வரி ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் அறிவித்தபடி, நேற்று பின்னிபேட்டை வார்டுக்கான இடைத்தேர்தல் நடந்தது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டு இருந்த 37 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மந்தமாக வாக்குப்பதிவு நடந்தது. இதனால், காலை 9 மணி நிலவரப்படி வார்டில் மொத்தம் 2.37 சதவீத வாக்குகளும், காலை 10 மணி நிலவரப்படி 5 சதவீத வாக்குகளும் பதிவாகின. பின்னர் வாக்குப்பதிவு சூடுபிடிக்க தொடங்கியது.
வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. 5 மணி நிலவரப்படி பின்னிபேட்டை வார்டு இடைத்தேர்தலில் சுமார் 45 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக வாக்குப்பதிவு மையங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பின்னர் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சேஷாத்திரி ரோட்டில் உள்ள மனை அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை(புதன்கிழமை) எண்ணப்படுகின்றன.

Related Tags :
Next Story