தொழில் நஷ்டம் காரணமாக டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


தொழில் நஷ்டம் காரணமாக டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2018 2:51 AM GMT (Updated: 19 Jun 2018 2:51 AM GMT)

தொழில் நஷ்டம் காரண மாக டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.

புனே,

புனே வாகட் பும்கார் வஸ்தி பகுதியை சேர்ந்தவர் சங்கர் பபன் (வயது46). டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். தொழிலில் அவர் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. சாலை விரிவாக்க பணிக்காக அங்குள்ள அவரது வீடும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சங்கர் பபன் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் குடும்பத் தினருடன் ஹிஞ்சேவாடி சாலை பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த அவர், திடீரென சம்பவத்தன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story