மின்சார ரெயிலின் வாசலில் நின்றுகொண்டு பயணிகளை ஏற, இறங்க விடாமல் தடுத்த 76 பெண்கள் கைது


மின்சார ரெயிலின் வாசலில் நின்றுகொண்டு பயணிகளை ஏற, இறங்க விடாமல் தடுத்த 76 பெண்கள் கைது
x
தினத்தந்தி 19 Jun 2018 8:33 AM IST (Updated: 19 Jun 2018 8:33 AM IST)
t-max-icont-min-icon

மின்சார ரெயிலின் வாசலில் நின்று கொண்டு பயணிகளை ஏற, இறங்க விடாமல் தடுத்த 76 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து ரெயில்வே கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

மும்பையில் மின்சார ரெயில்களில் பயணிகள் பலரும் வாசலில் நின்று கொண்டு பயணிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இதற்கு பெண் பயணிகளும் விதிவிலக்கு அல்ல. ரெயில் நிலையங்களில் ரெயில் வந்து நிற்கும்போது பயணிகள் இறங்குவதற்கோ அல்லது ஏறுவதற்கோ இவர்கள் வழிவிடுவது கிடையாது.

இதனால் கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தங்களை தள்ளிக்கொண்டு செல்ல முற்படும் பயணிகளிடம் நகர மறுத்து இவர்கள் தகராறிலும் ஈடுபடுவார்கள்.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் போரிவிலி- விரார் இடையே பெண்கள் இப்படி வாசலில் நின்றுகொண்டு பயணிகளுக்கு இடையூறு கொடுத்து வருவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கடந்த 12-ந் தேதி முதல் ஒரு வாரம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் இவ்விரு ரெயில் நிலையங்களுக்கும் இடையே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, பயணிகளை ரெயிலில் ஏறவும், இறங்கவும் விடாமல் வாசலில் நின்று கொண்டு தகராறு செய்த 76 பெண் பயணிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

Next Story