விரார்- அலிபாக் இடையே மெட்ரோ ரெயில் வழித்தடத்துடன் கூடிய 8 வழிச்சாலை
விரார்- அலிபாக் இடையே மெட்ரோ ரெயில் வழித்தடத்துடன் அமைக்கப்பட உள்ள 8 வழிச்சாலை திட்டத் திற்காக மாநில அரசு உலக வங்கியிடம் இருந்து ரூ.14 ஆயிரம் கோடி கடன் உதவி பெற திட்டமிட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், புறநகர் பகுதியில் தொழில் வளர்ச்சியினை ஏற்படுத்தும் வகையிலும் விரார்- அலிபாக் இடையே மாநில அரசு 128 கி.மீ. நீளத்திற்கு 8 வழிச்சாலையை அமைக்க உள்ளது. இந்த சாலையின் நடுவில் மெட்ரோ ரெயில் வழித்தடமும் அமைக்கப்பட உள்ளது.
மேலும் இந்த சாலை திட்டத்தில் பல இடங்களில் பறக்கும் மேம்பாலங்கள், பாலங்கள், சுரங்கப்பாதைகள், ரெயில்வே மேம்பாலங்கள், மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வாஷிங்டனில் வைத்து உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டாலினா ஜார்ஜியாவை சந்தித்து பேசினார். அப்போது, அவர் விரார்- அலிபாக் 8 வழிச்சாலை திட்டத்திற்கு உலக வங்கியிடம் நிதி உதவி கோரி உள்ளார்.
கிறிஸ்டாலினா ஜார்ஜியாவும் கடன் தருவது குறித்து சாதகமான பதிலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மும்பை பெருநகர வளர்ச்சி குழும கூடுதல் ஆணையர் சஞ்சய் கந்தாரே கூறுகையில், ‘‘உலக வங்கியிடம் கடன் உதவி கோருவதற்கான முதன்மை ஒப்புதலை மாநில பொரு ளாதார விவகாரத்துறை (டி.இ.ஏ.) அளித்துள்ளது. நாங்கள் உலக வங்கியிடம் ரூ.14 ஆயிரம் கோடி கடன் உதவிகேட்டு உள்ளோம்’’ என்றார்.

Related Tags :
Next Story