உசிலம்பட்டியில் சாலைப்பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்


உசிலம்பட்டியில் சாலைப்பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2018 3:30 AM IST (Updated: 20 Jun 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் தொழிற்சங்க விரோதபோக்கு, அடிப்படை மனித உரிமை பறிப்பு, விடுப்பு விதிகளுக்கு முரணாக ஊதியம் பிடித்தம் செய்தல், சாலைப்பணியாளர்களை பழிவாங்கும் வகையில் பணிமாறுதல் உத்தரவு, ஆகியவற்றை செயல்படுத்தும் திருச்சி வட்டகண்காணிப்பாளர் பழனி மற்றும் புதுக்கோட்டை கோட்ட பொறியாளர் சேதுபதி, ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், பணிமாறுதலை திரும்பபெறவும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்ககோரியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டம் வட்டக்கிளைத்தலைவர் ராஜபாண்டி தலைமையில், மாவட்ட இணைசெயலாளர்கள் பாண்டி, சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் சோலையப்பன், மாவட்டசெயலாளர் மனோகரன், வட்டக்கிளை செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துவக்கவுரை, சிறப்புரை, நிறைவுரை, ஆகியவற்றை மாநிலபொருளாளர் தமிழ் உரையாற்றினார்.


Next Story