விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதல்–மந்திரிக்கு எதிராக முகநூலில் கருத்து; போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதல்–மந்திரிக்கு எதிராக முகநூலில் கருத்து தெரிவித்த உப்பள்ளி போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதல்–மந்திரிக்கு எதிராக முகநூலில் கருத்து தெரிவித்த உப்பள்ளி போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி விவகாரம்கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்–மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பதவி ஏற்றுள்ளார். குமாரசாமி தேர்தல் வாக்குறுதியின் போது நான் முதல்–மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அவர் முதல்–மந்திரியாக பதவி ஏற்று ஒரு மாதம் ஆகியும் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று விவசாய சங்கத்தினரும், பா.ஜனதாவினரும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து எங்கள் கட்சி தனியாக ஆட்சியை பிடிக்கவில்லை. கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளோம். எனவே, கூட்டணி கட்சியான காங்கிரசுடன் ஆலோசித்து விவசாய கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமாரசாமி அறிவித்துள்ளார்.
போலீஸ்காரர் பணி இடைநீக்கம்இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும், அருண் டோலின் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என கருத்தை பதிவிட்டு இருந்தார்.
மேலும் இதற்கு முன்பும் அருண் டோலின் குமாரசாமி அரசை விமர்சித்து சில கருத்துகளையும் பதவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தார்வார்–உப்பள்ளி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.நாகராஜூ, அருண் டோலினை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக விளக்கம் கேட்டும் அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. முதல்–மந்திரிக்கு எதிராக கருத்து தெரிவித்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.