விழுப்புரம் ரெயில் பாதையில் கோட்ட மேலாளர் ஆய்வு: உறுதியற்ற நிலையில் இருந்த தண்டவாளங்களை மாற்ற உத்தரவு


விழுப்புரம் ரெயில் பாதையில் கோட்ட மேலாளர் ஆய்வு: உறுதியற்ற நிலையில் இருந்த தண்டவாளங்களை மாற்ற உத்தரவு
x
தினத்தந்தி 20 Jun 2018 4:30 AM IST (Updated: 20 Jun 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் ரெயில் பாதையில் கோட்ட மேலாளர் உதய்குமார் நடந்து சென்று ஆய்வு நடத்தினார். அப்போது உறுதியற்ற நிலையில் இருந்த தண்டவாளங்களை மாற்றும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விழுப்புரம்,

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உதய்குமார் நேற்று காலை விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர், ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக சுமார் 1½ கி.மீ. தூரம் தண்டவாள பகுதியில் நடந்தே சென்று ஆய்வு செய்தார். அப்போது பாயிண்ட் மற்றும் கிராசிங் பகுதிகளை ஆய்வு செய்த அவர் தண்டவாளங்கள் உறுதியாக இருக்கின்றனவா? என்றும் பார்வையிட்டார்.

இதில் ஒரு சில இடங்களில் தண்டவாளங்கள் உறுதியற்ற நிலையில் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அந்த தண்டவாளங்களை உடனடியாக மாற்றும்படி ரெயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் விபத்துகளை தடுப்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினார். விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார்.

அப்போது கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், பாதுகாப்பு அதிகாரி கந்தசாமி, சிக்னல் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story