போலீஸ்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டு போலீசாரை தாக்கிய 9 பேர் கைது உல்லாஸ்நகரில் சம்பவம்


போலீஸ்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டு போலீசாரை தாக்கிய 9 பேர் கைது உல்லாஸ்நகரில் சம்பவம்
x
தினத்தந்தி 19 Jun 2018 10:00 PM GMT (Updated: 19 Jun 2018 9:58 PM GMT)

உல்லாஸ்நகரில் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டு போலீசாரை தாக்கிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்பர்நாத், 

உல்லாஸ்நகரில் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டு போலீசாரை தாக்கிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ்நிலையத்தில் ரகளை

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் விசாரணைக்காக பிரிந்து வாழும் தம்பதியினர் வந்தனர். அவர்களுக்கு போலீஸ்நிலையத்தில் வைத்து ஆலோசனை வழங்கப்பட்டது. தம்பதியி னருடன் அவர்களின் உறவினர்களும் வந்து இருந்தனர். இதில், ஆலோசனை வழங்கி கொண்டு இருந்த போது திடீரென தம்பதியின் உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இது கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர்.

போலீசார் மீது தாக்குதல்

இதையடுத்து போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது, அவர்கள் போலீசாரையும் தாக்க தொடங்கினர். இதைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப் பட்டு மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், போலீஸ்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டு போலீசாரை தாக்கியதாக சகோதரர்கள் சமீர்(வயது24), சச்சின்(21), யோகேஷ்(24), ராகுல்(26) மற்றும் மகேஷ்(36), விகாஸ்(26), ஆகாஷ்(24), பந்து(36), அமோல் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

Next Story