பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் திருப்பூண்டி கடைத்தெருவில் கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகராசன், மாவட்ட குழு உறுப்பினர் கண்ணையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தினமும் விலை நிர்ணயம் என்ற பெயரில் பெட்ரோலிய நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் என்பது அரசு முடிவெடுப்பதாக இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்வது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே இருக்கும். இது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நிர்ணயம் செய்யும் விலைக்கு மேலாக மத்திய, மாநில அரசுகள் தங்கள் விருப்பம் போல வரி விதிப்பது மக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது. எனவே ஏழை எளிய மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலையை உடனே குறைக்க வேண்டும். அதேபோல் விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், செல்லையன், பாலாஜி, ஆட்டோ சங்க தலைவர் கஜினிமுகமது, செயலாளர் நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story