சேலம் அருகே 8 வழி பசுமை சாலைக்கு நிலம் அளவீடு: விவசாய நிலங்களில் நின்று கதறி அழுத பெண்கள்
சேலம் அருகே 8 வழி பசுமை சாலைக்காக விவசாய நிலங்களில் அளவீடு செய்யும் பணி நடைபெற்றபோது அந்த நிலங்களில் நின்று பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது பெண் தாசில்தாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான வீடுகள், விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதையொட்டி நிலம் அளவீடு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்திலும் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெறுகிறது. 8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக நேற்று 4-வது நாளாக சேலம் அருகே குள்ளம்பட்டி பிரிவு ரோடு பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது. நில எடுப்பு தாசில்தார் அன்புக்கரசி தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையில் வாழப்பாடி துணை சூப்பிரண்டு சூரியமூர்த்தி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கி மின்னாம்பள்ளி அய்யனாரப்பன் கோவில் அருகே நடைபெற்றபோது தாசில்தார் அன்புக்கரசியை பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகளிடம் அந்த பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள், சாரதா ஆகியோர் கூறியதாவது:-
15 நாட்களுக்கு முன்பே நிலம் அளவீடு செய்ய ஏற்பாடு செய்தபோது மயானம் கையகப்படுத்தப்படும் என்றார்கள். ஆனால் இப்போது அளவீடு செய்யும்போது எங்கள் தோட்டத்து நிலம் கையகப் படுத்தப்படுகிறது. மயானத்தை கையகப்படுத்தக்கூடாது என்பதற்காக எங்களது தோட்டத்தின் வழியாக சாலை வளைந்து செல்ல அளவீடு செய்கிறார்கள். ஏன் என்று கேள்வி கேட்டோம். அதற்கு தாசில்தார் அன்புக்கரசி அடுத்த மாதம் 6-ந்தேதி அயோத்தியாப்பட்டணத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு உங்கள் குறைகளை சொல்லலாம் என்றார்.
இவ்வாறு அந்த பெண்கள் கூறினர்.
ராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள தோட்டத்தின் நடுவே விவசாயி குப்புசாமி, அவரது மனைவி சாரதாம்மாள், மகன் செந்தில்நாதன், மனைவி கவிதா மற்றும் குடும்பத்தினர் நின்று கொண்டு கதறி அழுதனர். இதுபற்றி கவிதா கூறும்போது, எங்களுக்கு 12 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கிழங்கு, நெல், சோளம், தென்னை சாகுபடி செய்துள்ளோம். இப்போது 8 வழிச்சாலையால் 5 ஏக்கர் நிலம் பறிபோகிறது. நாங்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் குடும்பத்தில் 3 பெண்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. இப்போது எங்கள் நிலத்தை எடுத்தால் நாங்கள் மிகவும் பாதிக்கப்படுவோம். கடந்த 2011-ம் ஆண்டு சேலம்-சென்னை 4 வழிச்சாலை அமைப்பதாக கூறி ராமலிங்கபுரத்தில் உள்ள வீடுகள், நிலங்கள் எடுக்கப்பட்டன. சிமெண்டு கட்டிடங்களுக்கு இருக்கும் மதிப்பு விவசாய தோட்டங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. பெண் குழந்தைகளுக்கு எப்படி திருமணம் செய்து வைப்போம்?.
இவ்வாறு கூறி அவர் கதறி அழுதார்.
நிலம் அளவீடு செய்தபோது குப்புசாமி என்பவருடைய மனைவி தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள கிழங்கு செடியை பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார். அவரை போலீசார் சமாதானப்படுத்தினார்கள். விவசாய நிலங்களில் 8 வழி சாலைக்காக நிலம் அளவீடு செய்தபோது பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
தொடர்ந்து அயோத்தியாப்பட்டணம், ஏரிக்காடு, மாசிநாயக்கன்பட்டி சக்திநகர், வரகம்பாடி, உடையாப்பட்டி வரை நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

Related Tags :
Next Story