கைது நடவடிக்கையை கண்டித்து தூத்துக்குடியில் வக்கீல்கள் உண்ணாவிரதம்
தூத்துக்குடியில் போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து வக்கீல்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து வக்கீல்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் உண்ணாவிரதம்தூத்துக்குடி வக்கீல்கள் சங்கம் சார்பில், போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து நேற்று கோர்ட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சங்க இடைக்கால கமிட்டி தலைவர் திலக் தலைமை தாங்கினார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கைது செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும், துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
கோர்ட்டு புறக்கணிப்புஇதில் வக்கீல்கள் ஜோசப் செங்குட்டுவன், அதிசயகுமார், இக்னேசியஸ், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் போராட்டத்தையொட்டி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.