ஜெயங்கொண்டம், செந்துறையில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம்


ஜெயங்கொண்டம், செந்துறையில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2018 4:00 AM IST (Updated: 24 Jun 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டிற்கு வந்தனர்.

ஜெயங்கொண்டம்,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டிற்கு வந்தனர். பின்னர் அங்கு நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க. வினர் 50 பேரை கைது செய்து, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுவித்தனர். இந்த மறியலில் மாவட்ட துணை செயலாளர் கணேசன், ஒன்றிய பொறுப்புகுழு உறுப்பினர் மணிமாறன், தலைமை கழக பேச்சாளர் குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராமராஜன், நகர அவைத்தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் செந்துறையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் அண்ணாசிலை அருகே தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஷ்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த 30 பேரை கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

Next Story