மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் 52 பேர் கைது


மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் 52 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2018 4:15 AM IST (Updated: 24 Jun 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர், நீடாமங்கலத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்றார். அப்போது, அவருடைய ஆய்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து சென்னை கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர் பஸ் நிலையம் ரவுண்டானாவில் தி.மு.க.வினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தேவா, முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 40 பேரை கைது செய்தனர்.

இதே போல தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீடாமங்கலத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் ராம்ராஜ் தலைமை தாங்கினார். சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story