சிசேரியனுக்கு முன்னால் சிலிர்க்க வைக்கும் நடனம்
பிரசவத்திற்கு சிசேரியனை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் கர்ப்பிணிகள் அனைவருமே, அந்த நேரத்தில் பயத்திற்கும்- கவலைக்கும் ஆட்பட்டுவிடுவார்கள்
கர்ப்பிணிகள் இனம்புரியாத மனஅழுத்தத்திற்கு உள்ளாகி உற்சாகத்தையும், சிரிப்பையும் தொலைத்துவிட்டு ‘ஆபரேஷன் நல்லபடியாக நடக்க வேண்டும். குழந்தை எந்தக் குறையும் இன்றி பிறக்கவேண்டும்’ என்ற அச்சம் கலந்த எண்ணத்தோடு ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்தத் தொடங்கிவிடுவார்கள்.
அந்த மாதிரியான எந்த கவலையும் இன்றி, தனக்கு சிசேரியன் செய்ய வந்த டாக்டரிடம், ‘மேடம்.. எனக்கு இந்த நேரம் பொன்னானது. இதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள சிசேரியனுக்கு முன்னால் ஜாலியாக நாம் ஒரு ஆட்டம் போடலாமா?’ என்று கேட்டு, டாக்டருடன் சேர்ந்து நடனமாட எத்தனை கர்ப்பிணிகளுக்கு தைரியம் வரும்?
அந்த சந்தோஷ தைரியம் சங்கீதா கவுதம் சர்மாவுக்கு வந்திருக்கிறது. சிசேரியனுக்கு தயாராக இருந்த அவர் அதற்கு முன்னால் தனது பெண் டாக்டரோடு சேர்ந்து சிலிர்க்க வைக்கும் நடனம் ஒன்றை ஆடி, அதை வீடியோவாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து ஏகப்பட்ட பாராட்டுக்களை குவித்துக் கொண்டிருக்கிறார்.
“பிரசவத்திற்கு முன்பு எனக்கு ரொம்பவும் பிடித்த காரியம் ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு பிடித்தது நடனம்தான். எனது நிறைமாத வயிற்றுடன் கூடிய நடன வீடிேயாவை பார்த்துவிட்டு நிறைய பெண்கள் பாராட்டினார்கள். அந்த உற்சாகத்தோடு பிரசவ அறைக்கு சென்றது பெரும் மகிழ்ச்சியாக அமைந்தது” என்கிறார், அவர். சங்கீதா கவுதம் சர்மா பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர். அவருக்கு இது இரண்டாவது பிரசவம்.
முதல் பிரசவத்திலும் நீங்கள் நடனம் ஆடினீர்களா?
“ஐந்து வருடங்களுக்கு முன்பு முதல் பிரசவத்திற்கு தயாரானபோதும் நான் நடனம் ஆடினேன். அப்போது என்னோடு கணவர் கவுதம் நடனமாடினார். அந்த காலகட்டத்தில் இந்த அளவுக்கு சமூக வலைத்தள புரட்சி ஏதும் இல்லாததால் நாங்களே ஆடி, நாங்கள் மட்டும் அந்த மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டோம். ஆனால் இப்போது வீடியோவாக்கிவிட்டோம். ஏராளமானவர்கள் பார்த்து மகிழ்ந்து, பிரசவ நாளிலும் இப்படி ஆடலாம் என விழிப்படைந்திருக்கிறார்கள். கர்ப்பிணி களுக்கும், மகப்பேறு டாக்டர்களுக்கும் இது அதிக மகிழ்ச்சியை தந்திருக்கிறது”
ததும்பும் வயிற்றோடு நீங்கள் நடனமாடும் முடிவுக்கு வர என்ன காரணம்?
“எனது வாழ்க்கையில் அதிக ஆனந்தத்திற்குரியது, நடனம். ஆசிரியையாக வேலைபார்க்கிறேன். கவுதம் எனக்கு காதலராக, கணவராக கிடைக்க நடனம்தான் காரணம். எனது வாழ்க்கையில் கிடைத்த எல்லாவற்றுக்கும் காரணமான நடனத்தை, வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் ஆட விரும்பினேன். எனக்கு சிசேரியன் நடந்த பின்பு மூன்று மாதங்கள் என்னால் நடனமாட முடியாது. அந்த கவலையை இப்படி தீர்த்துக்கொண்டேன். ஒரு பெண் கர்ப்பிணியானதும் அவளது அன்றாட பணிகள் அனைத்துக்கும் கட்டுப்பாடு விதித்துவிடுகிறார்கள். ஒரு பெண் வழக்கமாக செய் வதை அவள் கர்ப்பிணியானாலும் செய்யலாம்.. செய்யவேண்டும்.. ஆனால் அதை கவனமாக செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம்”
இந்த நடனத்தின் மூலம் நிறைமாதத்தில் ஒரு நடன பரிசோதனை முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
“நான் கர்ப்ப காலம் முழுவதும் நடனமாடி அதை வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறேன். முதல் பிரசவத்திலே இவ்வாறு செய்ய நினைத்தேன். முடியவில்லை. அதை இப்போது செய்திருக்கிறேன். நான் ஐந்து மாத வயிற்றோடு இருக்கும்போது கர்ப்பிணிகளுக்காக ஒரு நடன பயிற்சி வகுப்பு நடத்தினேன். நானும் ஆடினேன். 6-வது மாதம் நானும், என் கணவரும் பொது நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடி மக்களின் பாராட்டை பெற்றோம். எதிர்காலத்தில் கர்ப் பிணிகளின் உடலுக்கும், மனதுக்கும் வலு சேர்க்கும் பயிற்சி களை அளிக்க திட்டமிட்டிருக் கிறோம்”
நீங்கள் நிறைமாத வயிற்றோடு நடனமாட டாக்டர் எப்படி அனுமதி கொடுத்தார்?
“முதல் பிரசவத்திற்கு தயாரான போது நான் இப்படி நடனமாட டாக்டரிடம் அனுமதி கேட்டேன். அவர் அனுமதிக்கவில்லை. இந்த பிரசவத்தின்போதுதான் டாக்டர் அனுமதி தந்தார். எனக்கு பிரசவம் பார்த்த டாக்டர் வாணி தாப்பர் என்னிடம் நடனம் கற்றவர். அதோடு எனக்கு நல்ல தோழியாகவும் இருக்கிறார்..”
இந்த நடனத்தை உங்கள் புதிய குழந்தையை வரவேற்கும் நடனமாக எடுத்துக் கொள்ளலாமா?
“ஆமாம். நடனம் ஆட கிடைக்கும் எந்த வாய்ப்பையும் பெண்கள் வீணாக்கிவிடக் கூடாது. அதுவும் புதிய ஜீவன் ஒன்றை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்யக்கூடிய நேரத்தில் அதை நடனமாடி கொண்டாடியே ஆகவேண்டும். கொண்டாட்டத்திற்கு நடனம்தான் மிகச் சிறந்தது. நானும், எனது சூப்பர் டாக்டரும் சேர்ந்து எனது குழந்தையை வரவேற்க இந்த நடனத்தை ஆடியிருக்கிறோம். டாக்டர்கள் நோயாளிக்கு மகிழ்ச்சி யூட்டி, நிம்மதி தருபவராக இருக்கவேண்டும். பிரசவ காலம் என்பது ஒரு கடினமான பாதை. அதை கடக்க எனக்கு அதிக சக்தி தேவைப்பட்டது. அதை நடனம் மூலம் பெற்றேன்” என்றார்.
சங்கீதா கவுதம் சர்மா, டாக்டர் வாணியோடு சேர்ந்து நடனமாடி ஐந்து நிமிடங்கள் ஆனதும் அவருக்கு மயக்க மருந்துகொடுத்து சிசேரியன் ஆபரேஷன் நடந்தது. அரை மணி நேரத்தில் மகள் பிறந்தாள்.
சங்கீதாவின் தந்தை பல்தீவ்ராஜ் பாடல்களை விரும்பி கேட்பவர். அதனால் வீட்டில் எந்நேரமும் பாட்டு சத்தமாக ஒலித்துக்கொண்டிருக்க, அதற்கு தக்கபடி சிறுவயதிலே சங்கீதா ஆடத் தொடங்கியுள்ளார். எம்.ஏ, ஆங்கில இலக்கியமும், எம்.ஏ. கதக் நடனமும் கற்றிருக்கிறார். சண்டிகரில் உள்ள பிரபலமான கலை மையம் ஒன்றில் சேர்ந்து இதர பல்வேறு நடனங்களையும் கற்று தேர்ந்திருக்கிறார். முதலில் இவர் கல்லூரி ஒன்றில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றினார். பின்பு அந்த பணியில் இருந்து விலகி, பள்ளி ஒன்றில் நடன ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக் கிறார். இவரது மகன் ஒனீஷ், தாயைப் பார்த்து தானும் நடனமாடத் தொடங்கியிருக்கிறான். இப்போது பிறந்திருக்கும் மகளுக்கு துன் என்று பெயரிட்டிருக்கிறார்கள்!

Related Tags :
Next Story