வாணாபுரம் அருகே சாலையோரம் கொட்டப்படும் மருந்து கழிவுகள் தொற்றுநோய் பரவும் அபாயம்
வாணாபுரம் அருகே சாலையோரத்தில் மருந்து கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்,
வாணாபுரம் அருகே உள்ள சங்காராபுரம் செல்லும் சாலையில் தானிப்பாடி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் மான், முயல், காட்டெருமை போன்ற வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. இது மட்டுமின்றி அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் கால்நடைகளான ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாக தானிப்பாடி வனப்பகுதி அருகே சாலையோரம் மருத்துவர்கள் பயன்படுத்திய மருந்து கழிவுகளை சில மர்மநபர்கள் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கும், மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, மாடுகளுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
அது மட்டுமின்றி அந்த பகுதியில் செல்லும் மக்களுக்கு இவற்றினால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இது போன்று மருந்து கழிவுகளை பொதுமக்கள் நடமாடும் பகுதியில் ஆபத்தான முறையில் கொட்டுவது குற்றமாகும். எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு இந்த மருந்து கழிவுகளை சாலையோரம் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருந்து கழிவுகளை சாலையோரம் கொட்டிய நபர்கள் யார் என்று கண்டறிந்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story