பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் அரசு பஸ்சை வழிமறித்து விரட்டிய காட்டு யானை பயணிகள் அதிர்ச்சி
பந்திப்பூர் வனப்பகுதி சாலையில், அரசு பஸ்சை வழிமறித்து விரட்டிய காட்டு யானையால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கொள்ளேகால்,
பந்திப்பூர் வனப்பகுதி சாலையில், அரசு பஸ்சை வழிமறித்து விரட்டிய காட்டு யானையால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பந்திப்பூர் வனப்பகுதி சாலைசாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி சாலை உள்ளது. இந்த பகுதியில் தான் புலிகள் பாதுகாப்பு சரணாலயமும் அமைந்து உள்ளது. ஊட்டி–மைசூரு, குண்டலுபேட்டை– கோழிக்கோடு செல்லும் சாலைகள் இந்த வனப்பகுதியின் வழியாக தான் செல்கின்றன.
இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியின் வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார்கள் எழுந்தன. இதனால் இந்த சாலையில் தற்போது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
பஸ்சை, யானை துரத்தியதுஇந்த நிலையில் நேற்று சிக்கமகளூருவில் இருந்து குண்டலுபேட்டை வழியாக கேரள மாநிலம் கோழிக்கோடுவுக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ் காலை காலை 8 மணியளவில் பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் மூலகொலே என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் அரசு பஸ்சை வழிமறித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனையடுத்து சில அடி தூரம் முன்பு யானை சென்றது. இந்த சந்தர்ப்பத்தில் பஸ்சை டிரைவர் வேகமாக பின்னோக்கி இயக்கினார்.
இதனை கவனித்த ஒரு காட்டு யானை அந்த பஸ்சை துரத்தியபடி வேகமாக வந்து பஸ்சின் முன்பக்க பக்கவாட்டில் மோதியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அதன்பின்னர் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் அந்த யானை மறுபடியும் முன்னால் நடந்து சென்றது.
போக்குவரத்து பாதிப்புஇதனால் டிரைவர் பஸ்சை அங்கேயே நிறுத்தி விட்டார். அந்த பஸ்சின் பின்னால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ½ மணி நேரம் கழித்து காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. அதன்பின்னர் டிரைவர் தொடர்ந்து பஸ்சை இயக்கினார். அதன்பின்னால் நின்ற வாகனங்கள் சென்றன. இதன்பின்னர் ½ மணி நேரம் கழித்து அந்த வழியாக வாகனங்கள் வழக்கம் போல இயங்கின. யானை பஸ்சை விரட்டிய காட்சிகளை பின்னால் நின்ற வாகனங்களில் வந்த சிலர் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.