திருச்சி விமான நிலையத்தில் ரூ.33½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் அதிகாரிகள் விசாரணை


திருச்சி விமான நிலையத்தில் ரூ.33½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் ரூ.33½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த மகரூப் என்பவர் 290 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த அமீன் என்பவரிடமிருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலான 360 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த தனியார் விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்த போது சென்னையை சேர்ந்த அப்துல் சமத் என்பவர் கடத்தி வந்த ரூ.13½ லட்சம் மதிப்பிலான 440 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.33½ லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது. அவர்கள் 3 பேரும் குளிர்சாதன எந்திரத்திற்கு பயன்படுத்தும் கருவியில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தனர்.

அவர்கள் 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story