பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில் உள்ள நகராட்சி பூங்கா முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில் உள்ள நகராட்சி பூங்கா முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் வக்கீல் மரிய ஸ்டீபன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் அந்தோணி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மோட்டார் தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பிரேம் ஆனந்த் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆட்டோ டிரைவர்கள் சங்க மாவட்ட செயலாளர் சோபனராஜ் நிறைவுரையாற்றினார். இதில் நிர்வாகிகள் மோகன், கண்ணன், சொர்ணப்பன், டேவிட்ராஜ், தாமஸ், திராவிட மணி, சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story