90 ஜோடிகளுக்கு சீர் வரிசைகளுடன் திருமண விழா முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் நடத்தி வைக்கின்றனர்
கிருஷ்ணகிரியில் வருகிற ஜூலை 1-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 90 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணத்தை முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.
கிருஷ்ணகிரி,
தமிழக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள 5 ஸ்டார் ஜமீல் சிட்டி மைதானத்தில், வருகிற ஜூலை 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்கு அ.தி.மு.க.வினரின் குடும்பங்களை சேர்ந்த 90 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம் நடைபெறுகிறது.
இந்த திருமண விழாவிற்கு நான் (முனுசாமி) தலைமை தாங்குகிறேன். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, அசோக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்று பேசுகிறார்.
இந்த திருமணத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்தி வைக்கிறார்கள். விழாவில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் அமைச்சர்கள், அணிகளின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்தி பேசுகிறார்கள். முடிவில் மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது நன்றி கூறுகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக கே.பி.முனுசாமி திருமணம் நடைபெறும் இடத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அசோக்குமார் எம்.பி., ஆவின் தலைவர் தென்னரசு, கிருஷ்ணகிரி நகராட்சி முன்னாள் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் மற்றும் அ.தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story